துரைமுருகன்: அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?.
ஒ.எஸ்.மணியன்: எங்கள் ஊரில் கோயில் வைக்கப்பட்டிருக்கிற, மணிமண்டபம் அமைக்கப்படும் அவ்வையாருக்கு தான் அறிவுக்களஞ்சியத்தை வையுங்கள்.
சபாநாயகர் அப்பாவு: ஐந்து அவ்வையார் இருக்கும் போது வேதாரண்யத்தில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி.
ஓ.எஸ்.மணியன்: ஒரு காலத்தில் பாடல் பாடிய எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக தான் சொல்லப்படுகிறது.
துரைமுருகன்: நம்ம வீட்டில் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா?.
தங்கம் தென்னரசு: தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post அவ்வையார் குறித்து பேரவையில் காரசார விவாதம் appeared first on Dinakaran.