மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி நிதி ஒதுக்கீடு: சாதிவாரியான கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினையும் இணைந்து ஒன்றிய அரசு நடத்திட வேண்டும் என்று இவ்வரவு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதிகமான மாணவர் சேர்கை்கையுள்ள 27 கல்லூரி மாணவர் விடுதிகள் மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட்ட 36 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ேடார், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டமைப்பு வசதி மேம்பாடு சிறப்பு பழுது நீக்கம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரம் உயர்த்தி புதுப்பொலிவுடன் திகழ புதிய திட்டம் வகுக்கப்படும். பள்ளி படிப்பு உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.146 கோடியும், பள்ளி மேற்படிப்பு உதவி தொகை வழங்குவதற்காக ரூ.335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சிறுபான்மையினரின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கென தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதுவரை 159 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை நிலை சான்றிதழ் வழங்கப்பட்டது மட்டுமன்றி, இவற்றுள் 103 கல்வி நிறுவனங்கள் நிரந்தர சான்றிதழும் பெற்றுள்ளன. ஒன்றிய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவி தொகையினை கடந்த 2022ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டாலும், தமிழ்நாடு அரசு வக்பு வாரியத்திற்கு வழங்கிய ரூ.12 கோடி நிதியை கொண்டு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த பள்ளிவாசல்களையும், தர்காக்களையும் பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் வரும் நிதியாண்டில் ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். அதேபோன்று பழமையான தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும், சீரமைப்பதற்கும் இந்த ஆண்டு ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

The post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,563 கோடி நிதி ஒதுக்கீடு: சாதிவாரியான கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் appeared first on Dinakaran.

Related Stories: