இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றமே இது பொய்யான வழக்கு மற்றும் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளது. பொய்யான வழக்கை பதிவு செய்த காவல் துறை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு ரவுடியிசத்தை முழுமையாக ஒழிக்க பிரத்யேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவை நுண்ணறிவு பிரிவில் உருவாக்கி தலைமறைவாக இருந்த பல ரவுடிகளை கைது செய்து பல்வேறு சமூக விரோத தடுப்பு முன்னெடுப்புகளை செய்துள்ளார்.
அதனால், காழ்ப்புணர்வோடு இப்படிப்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வேறொரு வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, காவல் துறை ஆணையரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்தாரர் கேட்க எந்தவித முகாந்திரமும் இல்லை. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிமன்ற கருத்துகளின் தாக்கமின்றி தன்னிச்சையாக விசாரித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் முடிவின் மூலமாக மட்டுமே வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்ட பொய் வழக்கா அல்லது உண்மையான வழக்கா என்று அறிய முடியும். எனவே, நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் காவல் துறை ஆணையரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ரவுடிகளை ஒழிக்க பிரத்யேக நடவடிக்கை எடுப்பதால் காழ்ப்புணர்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
