சேலம், மார்ச் 13: சேலத்தில் கடந்த 20 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சேலத்தில் பரவலாக மழை பெய்தது. மழையால் வெயிலின் தாக்கம் இல்லாமல், குளிர்ந்த காற்று வீசியது. இதனால், நேற்று சேலத்தில் 90.1 டிகிரியாக வெயில் அளவு குறைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லிமீட்டர்): சேலம் 9.5, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆணைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, நத்தக்கரை 67, சங்ககிரி 13.1, இடைப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஷ்பேட்டை 10.5 என மொத்தம் 362.7 மில்லிமீட்டர் மழை பதிவானது.
The post சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக மழை appeared first on Dinakaran.