துணை குடியரசு தலைவருக்கு அமைச்சர், எம்பிக்கள் வரவேற்பு

ஓமலூர், பிப்.28: சேலம் கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில், கூடுதல் கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக, இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தனி விமானத்தில் டெல்லியில் இருந்து நேற்று சேலம் வந்தார். விமான நிலையத்தில், அவரை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்பிக்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அனில்குமார் கிரி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கார் மூலம் சேலம் சென்ற அவர், அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் விமான நிலையம் வந்து, தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதனால், சேலம் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: