சேலம், மார்ச் 3: சேலம் கன்னங்குறிச்சி நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(40). இவர் நேற்று முன்தினம் பெரியமாரியம்மன் கோயில் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சின்னதம்பி(42), கிருஷ்ணன்(59) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். இதனை ராஜா தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜாவை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கன்னங்குறிச்சி போலீசார் சின்னதம்பி, கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், சின்னத்தம்பியை தாக்கியதாக ராஜாவின் மகன் திருவேங்கடம்(19) மற்றும் கோகுல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
