இளம்பிள்ளை, மார்ச் 3: இளம்பிள்ளை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய், தார்ரோடு, பேவர்பிளாக் ரோடு, மயான சுற்றுசுவர், கான்கிரீட் ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.64 லட்சம் மதிப்பில் பூமி பூஜை நேற்று பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜகணேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பேரூர் செயலாளர் குப்பம்பட்டி சண்முகம், பேரூராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
