இந்த புகாரை விசாரித்த மைசூரு பிரிவு லோக் ஆயுக்த அதிகாரிகள், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மேலும், நடந்த தவறுகள் அனைத்தும் அதிகாரிகளால் நோ்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது எந்த குற்றமும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு லோக் ஆயுக்த நீதிமன்றம், சித்தராமையா மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக மாற்று நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தவிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனு சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
The post நில ஒதுக்கீடு வழக்கு.. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி விடுவிப்பு!! appeared first on Dinakaran.
