இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்திபோன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான். தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டோடு தமிழர்கள் கெட்டியாக ஒட்டி நிற்கிறார்கள். அறிஞர் அண்ணாவும் உடன் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
The post இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை: கவிஞர் வைரமுத்து! appeared first on Dinakaran.