ஒரே நாளில் 50 திருமணங்கள் திருத்தணி மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருத்தணி: தை மாத சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்களால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும், திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தை மாத சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் காலை 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திருமண விழா மற்றும் முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதனால், அதிகாலை மலைக்கோயில் திருமண மண்டபங்கள் மற்றும் மாட வீதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் தரிசன வழியில் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். அதிகாலை நேரத்தில் திருத்தணி மலைகோயிலில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பயணிகள் மற்றும் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

The post ஒரே நாளில் 50 திருமணங்கள் திருத்தணி மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: