நெல்லை: 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுகவினர், பொதுமக்கள் என பலரும் நெல்லை கேசிடி நகரில் குழுமி முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் அளித்த வரவேற்பை நடந்தே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.