10.5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு பாமகவும், வன்னியர்களும் போராடுவது வெறும் கண்துடைப்பு நாடகம். வன்னியர்களுக்கான 20 சதவீதம் தனிஇட ஒதுக்கீடு வேண்டுமென போராடியவர் குரு. அதற்கு துணை நின்றது வன்னிய இளைஞர்கள் தான். 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராடி வந்த எனது தந்தை வழியில் நானும் போராட தொடங்கி விட்டேன்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்குவேன். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தெளிவான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு எப்போதோ கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post 10.5% இடஒதுக்கீடு கேட்டு பாமக போராடுவது நாடகம்: காடுவெட்டி குரு மகன் பேட்டி appeared first on Dinakaran.
