உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை அமைத்து சென்னை மெட்ரோ புதிய சாதனை படைக்கவுள்ளது. வடபழனி – போரூர் வரை 4 கி.மீ. தொலைவுக்கு 4 ரயில்கள் வந்து செல்லும் வகையில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்கப்படும் நிலையில், ஒன்றில் இருந்து மற்றொரு அடுக்குக்கு தடம் மாறுவதற்காக, ஆர்காடு சாலை பகுதியில் 5வது தண்டவாளமாக லூப் லைன் அமைக்கப்படுகிறது.