தேவாரம் மலையடிவாரத்தில் தென்னையை நாசம் செய்த ஒற்றை யானை: மீண்டும் விவசாயிகளை அச்சுறுத்தும் ‘மக்னா’

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் தென்னை, கப்பை பயிர்களை மக்னா எனப்படும் ஒற்றை யானை நாசம் செய்துள்ளது. இதனால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், மூணாண்டிபட்டி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. மலைப்பகுதியை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளன. இதில், தேவாரம், கோம்பை ஊர்களின் மலையடிவாரத்தில் மக்னா என்னும் ஒற்றையானை உலா வருகிறது. இந்த யானை மலையடிவார நிலங்களில் உள்ள தென்னை, நிலக்கடலை, அவரை, காட்டு தக்காளி, எள், துவரை ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. மேலும், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகளும் அவ்வப்போது, விளைநிலங்களில் விளையும் பயிர்களை உணவாக உட்கொள்கின்றன. வனப்பகுதியில் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே, விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் தேவாரம் அருகே உள்ள மூணான்டிபட்டியைச் சேர்ந்த ஆசைதம்பி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து மக்னா என்னும் ஒற்றை யானை தென்னைமரங்கள், கப்பை சாகுபடி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன. எனவே, மக்னா எனப்படும் ஒற்றை யானை மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேவாரம் மலையடிவாரத்தில் தென்னையை நாசம் செய்த ஒற்றை யானை: மீண்டும் விவசாயிகளை அச்சுறுத்தும் ‘மக்னா’ appeared first on Dinakaran.

Related Stories: