மதுராந்தகம் நகராட்சியின் 50ம் ஆண்டு பொன்விழா கூட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் நகர மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் மலர்விழி குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பொறியாளர் நித்யா முன்னிலை வகித்தார். மதுராந்தகம் 1974ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மதுராந்தகம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று இக்கூட்டத்தில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

இதில், நகராட்சி பொறியாளர் நதியா, திமுக நகர செயலாளரும், மன்ற உறுப்பினருமான குமார் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், கேக் வெட்டி இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சி வரும்போதெல்லாம் இந்த நகராட்சி மாபெரும் வளர்ச்சி பணியை மேற்கொண்டு நகர வளர்ச்சி அடைந்துள்ளது. நகராட்சியின் பொன்விழா ஆண்டினை சிறப்பிக்கும் விதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்விழா நினைவு திட்டங்களை வழங்கி நிறைவேற்றித் தர வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மதுராந்தகம் நகராட்சியின் 50ம் ஆண்டு பொன்விழா கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: