தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு செய்முறை ஒத்திகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீ தடுப்பு செய்முறை நிகழ்ச்சி தாம்பரம் மாநில பயிற்சி மையம் இணை இயக்குனர் சத்தியநாராயணன் அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 50க்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தீயனைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் பயன்படுத்தும் பல்வேறு சிறப்பு கருவிகளுக்கான கண்காட்சி அரங்குகள் மற்றும் தீ தடுப்பு செய்முறை நிகழ்ச்சிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு பார்வையிட்டார்.

முன்னாள் சிஐஎஸ்எப் வீரர், என்டிஆர்எப் பயிற்சியாளர் மற்றும் 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக் ஜனாதிபதி விருது பெற்றவருமான மரிய மைக்கேல் சிறப்பான பயிற்சிகள் மூலம் தீயனைப்பு வீரர்கள் பலமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்கும் பயிற்சி, வெள்ளக்காலங்களில் ஆற்றினை குறுக்காக கடப்பது மற்றும் கரடு முரடான மலைகளில் கயிறு மூலம் ஏறுவது குறித்தும் சிறப்பாக செய்து காண்பித்தனர்.

மின்சார தீ விபத்து, எல்பிஜி தீ விபத்து மற்றும் மண்ணெண்ணெய் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தீயணைப்பான் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு அணைக்க வேண்டும், என்று தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். இந்த செய்முறை பயிற்சியில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு செய்முறை ஒத்திகை appeared first on Dinakaran.

Related Stories: