இதில், சிறப்பு சலுகையாக வைரம் மற்றும் அன்கட் வைர மதிப்பில் 25% வரை தள்ளுபடி பெறலாம் (சாலிடேர்கள் தவிர). மேலும் பிளாட்டினம் நகைகளில் செய்கூலி மற்றும் சேதரத்தின் மீது 30% வரை தள்ளுபடி பெறலாம். இந்த பிரத்யேக சலுகைகள் லைட்வெயிட் வைர நகைகளான ஒரியானாவிற்கும் பொருந்தும்.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் உள்ள அனைத்து வைர நகைகளும் உத்திரவாதத்துடன் வருகிறது. ஒவ்வொரு வைர நகைகளும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலான விலை, வாழ்நாள் பராமரிப்பு, வெளிப்படையான விலை மதிப்பிடுதல், காரட் உத்தரவாதம், நெறிமுறை சார்ந்த தயாரிப்புகள், HUID முத்திரை மற்றும் திரும்ப பெறும் உத்தரவாதம் ஆகிய நிலைகளுடன் வருகிறது.
இதுகுறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், ‘‘நாங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த தொழில் நடைமுறைகளை ஒருங்கிணைத்து மிகச்சிறந்த வைர நகைகளை மிகத் துல்லியமாக வழங்குகிறோம்,’’ என்றார்.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘வைரங்கள் மக்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்துள்ளன. மேலும் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்படும் உடமைகளாக போற்றப்படுகின்றன. இது ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் உள்ள எங்கள் குழுவை ஊக்குவித்து, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வைரங்களின் தரத்தை நம்புவதை உறுதிப்படுத்துகிறது,’’ என்றார்.
The post ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் டாஸ்லிங் டைமண்ட் திருவிழா: சிறப்பு சலுகை விற்பனை appeared first on Dinakaran.