உறைபனியால் நடுங்கும் கொடைக்கானல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: `மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கான‌லில் ஆண்டுதோறும் டிச‌ம்ப‌ர் மாத தொடக்கத்தில் உறைபனி சீசன் தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தொடர் மழை, மேகமூட்டம் காரணமாக உறைபனி சீசன் தாமதமாக டிசம்பர் மாத இறுதியில் தொடங்கியது. அடுத்த சில நாட்களில் பெய்த மழை காரணமாக உறைபனியின் தாக்கம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மீண்டும் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, ஜிம்கானா நீர்பிடிப்பு பகுதி, பாம்பார்புரம், கீழ்பூமி, பியர்சோலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. புல்வெளி பரப்பெங்கும் வெண்ணிற போர்வை விரித்தது போல காணப்படுகிறது.

இந்த காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு வியக்கின்றனர். அவர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். உறைபனி காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை உடுத்திக்கொண்டு உலவுகின்றனர். ஏராளமானோர் விடுதிகள், வீடுகளில் முடங்கியுள்ளனர். கடைகள் தாமதமாக சூரிய வெளிச்சத்தின் தாக்கம் வந்தபிறகே திறக்கப்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 10 டிகிரி செல்சியஸ் வெப்ப‌நிலை பதிவானது.

The post உறைபனியால் நடுங்கும் கொடைக்கானல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: