*சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ராயக்கோட்டை : ஓசூர்- தர்மபுரி சாலையில், ராயக்கோட்டை அடுத்த எச்சம்பட்டி அருகே உள்ள சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இதில் தினந்தோறும் ஆயிக்கணக்கான வாகனங்கள் ஓசூர் வழியாக பெங்களூருவுக்கும், தர்மபுரி வழியாக மற்ற மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் சென்று வருகின்றன.
எச்சம்பட்டி அருகே உள்ள சாலை மிகவும் குறுகளாகவும், சாலையை ஒட்டி 20 அடி பள்ளமும் உள்ளது. விபத்து ஏற்பட்டால் பள்ளத்தில் வாகனம் விழாமலிருக்க இரும்பு தடுப்பை அமைத்திருந்தனர்.
அந்த இரும்பு தடுப்பும் விபத்தில் சேதமடைந்து விட்டது.இந்நிலையில் ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலை பணிகள் நடப்பதால், அனைத்து வாகனங்களும் குறுகிய பாலம் வழியாக செல்கின்றன. அதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
4 வழிச்சாலை பணிகள் முடிந்தால்அனைத்து வாகனங்களும் அதில் சென்றுவிடும் என்பதால், இந்த குறுகிய பாலத்திலேயே கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது.
4 வழிச்சாலை பணிகள் மந்தமாக நடப்பதால், பணிகள் முடிய இன்னும் 2 வருடங்களாகும் என தெரிகிறது. எனவே, எச்சம்பட்டி குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
