ஜெயங்கொண்டம் அருகே டிரான்ஸ்பார்மரில் உரசி தீப்பிடித்த அரசு பேருந்து..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டிரான்ஸ்பார்மரில் உரசி தீப்பிடித்த அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆலம்பல்லம், காட்டன்கோட்டை, கரைக்குறிச்சி வழியாக இன்று காலை கும்பகோணம் செல்லும் அரசு பஸ் ஒன்று ஆலம்பல்லம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ் ஓட்டுநர் ஓரமாக திருப்ப முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த மின் வயர் உரசியதில் தீப்பற்றி எறிந்தது. இதனால் சுதாரித்த கொண்டதில் ஓட்டுநர் உடனடியாக பயணிகளை காப்பாற்றுவதற்காக வண்டியை பின்பக்கமாக எடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அவசர அவசரமாக இறங்கிவிட்டார். இருப்பினும் தீப்பற்றி எரிந்ததால் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் விவசாய நிலத்தில் விவசாயி ஒருவர் வயலில் இருந்த பாம்பு செட் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: