11 அன்பியங்களின் கலை நிகழ்வுகள் குளோரி கோல்ஸ், பீட பூக்கள் ஒருங்கிணைப்பில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் பெரியவர்களின் கலை நிகழ்ச்சிகளும் காண்போரை கவரும் விதத்தில் நடைபெற்றது. இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் இணைந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகளுக்கு விழா குழு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ், மெதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்று மத ஒற்றுமையை போற்றும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடப்பதை வெகுவாக பாராட்டினர்.
துரை சந்திரசேகர் எம்எல்ஏ தனக்கு தெரிந்த வகையில் இந்தியாவிலேயே மத ஒற்றுமைக்கு சான்றாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகள், வியாபார சங்கத்தினர், நாட்டுப் படகு மீனவ சங்கம், இஸ்லாமிய நண்பர்கள், வனத்துறை அலுவலர்கள், திருப்பாலைவனம் காவல்துறையினர் காங்கிரஸ் நிர்வாகிகள் பழவேற்காடு ஜெயராமன், ஜெயசீலன், அத்திப்பட்டு புருஷோத்தமன், நந்தகுமார், சஞ்சய் காந்தி உள்ளிட்ட அனைத்து சமுதாய நிர்வாகிகளும் பெரியோர்களும் இதில் கலந்து கொண்டனர்.
The post பழவேற்காட்டு புனித மகிமை மாதா கோயிலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.