சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனையை அடுத்து புரளி என போலீஸ் தகவல்!!

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். இந்த வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு 12.15மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர், மோப்ப நாய் பிரிவினர், வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆகியோர் நள்ளிரவில் கோயிலுக்கு வந்தனர்.

கோயில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் கோயிலின் வெளிப்புறம் சோதனையிட்டனர். அதன் பின்னர் போலீசார் காத்திருந்து அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்த பின் சோதனை செய்ததில் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. பின்னர் காலை 6 மணிக்கு வழக்கம் போல கோயில் திறக்கப்பட்டது. இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயிலில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனையை அடுத்து புரளி என போலீஸ் தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: