சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என்று கூறியுள்ளார்.