மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையைத் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் துயர் தீர்க்கும் வகையில் செயல்படாமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள புயல் பாதிப்புகளுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தொடர்ந்து எல்லா விதங்களிலும் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டு இருக்கக்கூடிய காரணத்தினால், மக்களைப் பற்றிக் கவலைப்படக்கூடிய, தொடர்ந்து நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்ற காரணத்தினாலேயே, நாங்கள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் வஞ்சிக்கப்படுகிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு அருகில் உள்ள கேரள மாநிலத்திலும் இதே பிரச்சனை தான் என குறிப்பிட்டார். அப்போது ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது இரண்டு கைகளை விரித்து சைகை செய்தார். இதையடுத்து அதனை பார்த்த எம்பி கனிமொழி, இதேபோன்று தான் நிதி கொடுக்காமல் இரண்டு மாநிலத்தையும் ஒன்றிய அரசு கைவிரித்து விட்டதாக கனிமொழி கூறினார்.
துரை வைகோ எம்.பி பேசுகையில், பேரிடர் நிவாரண நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு குறிப்பாக, தமிழ்நாடு.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களைப் புறக்கணிப்பதும் மற்றும் பாகுபாடு காட்டும் மோசமான நடைமுறையை பின்பற்றி வருகிறது. பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதாவின் உள்ளடக்கத்தை பார்க்கும் போது, மாநிலங்களுக்கு பேரிடர் காலத்தில் நிதி உதவியை நிர்ணயிக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய உயர் மட்டக் குழுவில் மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது அதிகாரிகள் என பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இல்லை. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு அவசரமாக ரூ.6675 கோடி நிதியுதவி தேவைப்படுகிறது. அதை ஒன்றிய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றார்.
The post தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.