பாமக கட்சி, மாம்பழச் சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்: வரும் 23ம் தேதி அடுத்த விசாரணை

 

புதுடெல்லி: பாமக கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கிடையே உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது இந்த நிலையில், ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது அதில், பாமக கட்சி மற்றும் மாம்பழ சின்னம் ஆகியவற்றை பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் தாக்கல் செய்து அன்புமணி பெற்றுள்ளார் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ராமதாஸ் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சூரியகாந்த், இந்த வழக்கை பொறுத்த வரைக்கும் பாமக கட்சி, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது தான் முக்கியமாக உள்ளதா என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து அதற்கு பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, இந்த விவகாரத்தில் பாமக கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாசை இணக்கமாக செல்லவும் பல நடவடிக்கை எடுத்தும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வயதான காலத்தில் அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். அதன் அடிப்படையில் அவரும் இந்த வழக்கை நடத்துகிறார். தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தில் என்ன இருக்கிறதோ அதையே நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாசுக்கு 86 வயதாகிவிட்டது, வயோதிகம் காரணமாக அவரால் கட்சியை வழிநடத்த இயலாத நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.இந்த வழக்கு கூட ம ராமதாஸ் பெயரில் தான் நடத்தப்படுகிறது தவிர அவரால் கிடையாது. இதில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை .எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அப்போது குறிப்பிட்ட ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதிட வேண்டி உள்ளது எனவே வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்க வைத்தார். ஆனால் அதனை நிராகரித்த தலைமை நீதிபதி, வழக்கை சற்று நேரத்திற்கு இன்று(நேற்று) ஒத்திவைக்கவும் அல்லது தேர்தல் தேதிக்குள் செல்லவோ நாங்கள் தற்போது விரும்பவில்லை. இருப்பினும் இந்த வழக்கு வேறு ஒரு தேதியில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, அடுத்த விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: