சொத்து விவரங்களை மறைத்த விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை ஏப்.14ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

 

புதுடெல்லி: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”இந்த புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட சேலம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும், அதனை ரத்து செய்யக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சேலம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது எனவும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமியின் மனுவை கடந்த 23ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்து தவறான தகவல் கொடுத்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 14ம் தேதி விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: