இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் வெளிநாட்டு கூட்டங்களில் என் முகத்தை மறைக்க முயற்சிக்கிறேன்: மக்களவையில் அமைச்சர் கட்கரி பேச்சு

புதுடெல்லி: சாலை விபத்துக்கள் குறித்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக செல்லும்போது தனது முகத்தை மறைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் சாலை விபத்துக்கள் குறித்த விவாதத்தின்போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதை மறந்துவிடுங்கள். சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது விபத்துக்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்தேன். ஆனால் இப்போது சாலை விபத்துக்கள் குறித்து விவாதிக்கப்படும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக செல்லும்போது நான் என் முகத்தை மறைப்பதற்கு முயற்சிக்கிறேன். இந்தியாவில் மனிதர்களின் நடத்தைகளை மேம்படுத்தும் விஷயங்கள் மாற வேண்டும். சமூகம் மாற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்” என்றார்.

The post இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் வெளிநாட்டு கூட்டங்களில் என் முகத்தை மறைக்க முயற்சிக்கிறேன்: மக்களவையில் அமைச்சர் கட்கரி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: