நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக பேச மாட்டேன்: ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம்

சென்னை: யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கக் கோரியும், நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் என்று கோரி நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக பேச மாட்டேன்: ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் appeared first on Dinakaran.

Related Stories: