நடப்பாண்டில் இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் கல்வி பெறவில்லை: ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தகவல்

டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சௌதரி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர்;

இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 11,70,404 குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறவில்லை. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 65,000 குழந்தைகளும், அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. இந்தத் தரவைக் கண்காணிக்கவும் புதுப்பிக்கவும் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பிரபந்த் (திட்ட மதிப்பீடு, பட்ஜெட், சாதனைகள் மற்றும் தரவு கையாளுதல் அமைப்பு) இணையதளம் பயன்படுத்துகிறது என தெரிவித்தாா்.

The post நடப்பாண்டில் இந்தியாவில் 11.70 லட்சம் குழந்தைகள் கல்வி பெறவில்லை: ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: