டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கம். மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக செல்கின்றனர்.
