பாரத் கால் டாக்ஸி செயலி வரும் ஜனவரி.1 முதல் டெல்லியில் அமல்..!!

டெல்லி: பாரத் கால் டாக்ஸி ஜனவரி.1 முதல் டெல்லியில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆட்டோ, கார், பைக் வாயிலான பொது போக்குவரத்து சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை, நாட்டின் பல்வேறு நகரங்களில்,’ஓலா, ஊபர், ராபிடோ’ ஆகிய தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. லட்சக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பதிவு செய்துள்ள டிரைவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் பிடித்தம் செய்வதாக புகார் உள்ளது. டிரைவர்கள் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பதும், தகராறு ஏற்படுவதும் நடக்கிறது.எனவே, ‘சஹாகர் டாக்சி’ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை ஆட்டோ, கார் டிரைவர்கள் துவங்கினர். இதில் ஆயிரக்கணக்கான டிரைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு நிறுவனம் சார்பில், ‘பாரத் டாக்சி’ என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இதை டில்லியில் ஜனவரி 1ல் அறிமுகப்படுத்த உள்ளனர்.டிரைவர்களே நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் இருப்பதால் பூஜ்ய கமிஷன் முறையில் செயலியை வடிவமைத்துள்ளனர்.

*மத்திய அரசின் “பாரத் கால் டாக்ஸி” செயலி, ஜனவரி 1 முதல் தலைநகர் டெல்லியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

*ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு மாற்றாக வரும் பாரத் கால் டாக்ஸி செயலி

*பயணியருக்கும் ஓட்டுநருக்கும் சமமான சேவையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள செயலி

*தனியார் செயலிகள் போல கமிஷன் அடிப்படையிலான செயலியாக இல்லாமல், முழு வருமானமும் ஓட்டுநருக்குக் கிடைக்கும்.

*இதுவரை 56,000 டாக்சி ஓட்டுநர்கள் இந்த டாக்ஸி செயலியில் ஆர்வமுடன் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

*டெல்லியை தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள 20க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் “பாரத் கால் டாக்ஸி” சேவை விரிவுபடுத்தவுள்ளது.

Related Stories: