திருவொற்றியூர், டிச.9: மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் 16வது வார்டு, பர்மா நகரில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் புழல் எம்.நாராயணன் முகாமை தொடங்கி வைத்து முதல்வர் மருத்துவத் துறையில் செய்து வரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் குழந்தைகள், மாணவ, மாணவிகள், இருளர்கள், பொதுமக்கள் என 320 பேருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். இதில் வட்டச் செயலாளர் கண்ணப்பன், நிர்வாகிகள் வெங்கடேசன், முத்தையா மற்றும் பொதுமக்கள் பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post இருளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.
