பொதுமக்களுக்கு இடையூறு தட்டிக் கேட்ட போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

 

திருவள்ளூர், மார்ச் 9: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் காவல் நிலைய சப் – இன்ஸ்பெக்டர்கள் நீலமேகம், சுமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர், வெண்மனம்புதூர், அகரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பிஞ்சிவாக்கம் ஆற்று பாலம் அருகில் ரோந்து பணி ஈடுபட்டபோது அங்கிருந்த 3 வாலிபர்கள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நின்றுக் கொண்டு ரகளையி்ல் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அவர்களை பார்த்து கிளம்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த 3 பேரும் போலீசாரை தகாத வார்த்தையால் பேசி கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட நபர்கள் கடம்பத்தூர், போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த பவர் சீனிவாசன் (19), கடம்பத்தூர், வைஷாலி நகரை சேர்ந்த உஸ்மான் (22 ), போளிவாக்கம் அடுத்த இலுப்பூரை சேர்ந்த ஹேராம் (23) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: