முதல்வர் பிறந்த நாள் விழா ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை

 

கும்மிடிப்பூண்டி, மார்ச் 9: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கும்புளி கிராமத்தில் மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ரவி ஏற்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, பொருளாளர் எஸ்.ரமேஷ், பொதுகுழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், பேரூர் செயலாளர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ராமஜெயம், ஆரம்பாக்கம் ஆறுமுகம், ஒன்றிய நிர்வாகிகள் உதயகாந்தம்மள், திருஞானம், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், ஏடூர் ஜெயா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு வேட்டி சேலை வழங்கினார். மேலும் அவர் கூறுகையில், கும்மிடிப்பூண்டி பகுதிக்கு சாலை, நீர்த்தேக்க தொட்டி கால்வாய் என கோடி கணக்கில் பணி செய்துள்ளோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் இரண்டாவது முறையாக பதவி ஏற்றவுடன் இந்த பகுதிக்கு மேலும் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் என பேசினார்.

Related Stories: