கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 

ஆவடி, மார்ச் 9: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா என தெரிய வந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories: