மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தீர்ப்பு வழங்கியது பற்றி பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பு வழங்குவதற்கு முன் கடவுளிடம் வேண்டினேன். ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் அவருக்கான வழியை காட்டுவார் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் லோக்சத்தா வருடாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்றுமுன்தினம் சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது இது பற்றி அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்திரசூட்,‘‘இது போன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என பலர் நினைக்கின்றனர். நீதித்துறை மீதான அரசியல் தலைவர்களின் மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நீதித்துறைக்கான நிதியை மாநில அரசுகள் தான் ஒதுக்குகின்றன.நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் தேவை. மாவட்டங்களில் உள்ள நீதிபதிகளுக்கு வீடுகள் தேவை. அதற்காக தலைமை நீதிபதிகளுக்கும், முதல்வர்களுக்கும் இடையேயான சந்திப்புகள் அவசியமாகிறது.
நான் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துள்ளேன். தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டவுடன் அவர் முதல்வரை சென்று சந்திப்பார்.முதல்வரும் தலைமை நீதிபதி வீட்டுக்கு வருவார். இந்த சந்திப்புகளின் போது, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி முதல்வர் யாரும் கேட்பது இல்லை. ஆகஸ்ட்14, ஜனவரி 26, திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்வுகளின் போது முதல்வரும், தலைமை நீதிபதியும் சந்திப்பார்கள். இதற்கும் நீதிமன்ற பணிகளுக்கும் சம்மந்தம் இல்லை. இது வலுவான விவாதங்களின் ஒரு பகுதியாகும்’’ என்றார்.
The post பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது ஏன்? தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் appeared first on Dinakaran.
