இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பம்பர் பெட்ரோல் விலை ₹25 குறைப்பு: ஜார்கண்ட் முதல்வர் தாராளம்

ராஞ்சி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தின. சமீபத்தில் இவற்றின் விலை லிட்டருக்கு ரூ.100ஐ  தாண்டின. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து,  பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம்,  டீசல் விலையை  ரூ.10ம் ஒன்றிய அரசு குறைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டு, இவற்றின் விலை மேலும் குறைக்கப்பட்டது.இந்நிலையில், புத்தாண்டு நெருங்கும் நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஜார்கண்ட் மாநில அரசு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இவர்களுக்கான  பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைப்பதாக  இம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இம்மாநிலத்தில் தற்போது  பெட்ரோல் ரூ. 98.48க்கு விற்கப்படுகிறது. விலை குறைப்பால் பெட்ரோல்  ரூ.73.48க்கு கிடைக்க உள்ளது….

The post இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பம்பர் பெட்ரோல் விலை ₹25 குறைப்பு: ஜார்கண்ட் முதல்வர் தாராளம் appeared first on Dinakaran.

Related Stories: