பெங்களூருவின் கோரிபல்யாவை ‘பாகிஸ்தான்’ என்று வர்ணித்த கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி : அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி : முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கோரிபல்யாவை பாகிஸ்தான் என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறிய விவகாரத்தில், தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா, வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சில கருத்துகளை கூறினார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் தலைநகர் பெங்களூருவின் கோரிபல்யா என்ற பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதியில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடத்தை பாகிஸ்தான் என ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

The post பெங்களூருவின் கோரிபல்யாவை ‘பாகிஸ்தான்’ என்று வர்ணித்த கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி : அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: