பேரண்டூர் கிராமத்தில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் அழுகி நாசம்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பேரண்டூர் கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, வசித்து வரும் விவசாயிகள் தங்களது 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் நெல், பயிர்களை நடவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி நெல் பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி காணப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் பயிர்கள் விரைவில் அழுகி நாசமாகிவிடும் என கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டை பெரியபாளையம் நெடுஞ்சாலையில் இருந்து பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தார்சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பேரண்டூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் நெல் பயிர் வைத்துள்ளோம். மழை காலங்களின் போது வயல்களில் தண்ணீர் தேங்கி நடப்பட்டுள்ள நெல்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிடுகிறது. எனவே, ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் இருந்து பனப்பாக்கத்திற்கு செல்லும் தார் சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post பேரண்டூர் கிராமத்தில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் அழுகி நாசம்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: