இது தொடர்பாக ஷாலினியின் தாய் மரகதம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அருண் மற்றும் அவரின் நண்பர் ஈஸ்வரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.தேவி முன்பு விசாரணஐக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அருண் மற்றும் அவருடைய நண்பர் ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 20 ஆயிரம் ரூபாயை ஷாலினியின் தாயாருக்கு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பரிந்துரைந்தார்.
The post ஆபாசமாக திட்டியதால் காதலி தற்கொலை காதலனுக்கு 5 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.