நாமக்கல் : குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தட்டாங்குட்டை என்னும் பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.