நானும், அஜித் பவாரும் ஒரே குடும்பமாகவே வாழ்கிறோம்: சரத் பவார் விளக்கம்


மும்பை: நானும், அஜித் பவாரும் ஒரே குடும்பமாகதான் வாழ்கிறோம் என சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந்த நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை நீடிக்கிறது. மகாராஷ்டிராவுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்ட கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும் என சரத் பவார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் தலைவர் சரத் பவார் சிப்லுனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அஜித் பவாரும், நானும் ஒன்றுசேர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சொல்கிறார்கள். நானும், என் மருமகன் அஜித் பவாரும் வெவ்வேறு அரசியல் கட்சியில் இருந்தாலும் குடும்பத்தில் நாங்கள் ஒன்றாகவே வாழ்கிறோம். மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் அஜித் பவார் தன் மனைவி சுனேத்ரா பவாரை நிறுத்தினார். நான் என் மகளை நிறுத்தினேன். தேர்தல் முடிந்த பிறகு தன் மனைவியை நிறுத்தியது தவறு என அஜித் பவார் ஒப்புக் கொண்டார். ” என்றார்.

The post நானும், அஜித் பவாரும் ஒரே குடும்பமாகவே வாழ்கிறோம்: சரத் பவார் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: