புதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஆகாசா ஏர் நிறுவனம் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. அதன்ஒரு பகுதியாக விமான எரிபொருளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல்(இன்று) புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்த ஆகாசா ஏர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “விமான டிக்கெட்டுகளின் விலை ரூ.199 முதல் ரூ.1,300 வரை அதிகரிக்கிறது. பயண நேரம், தூரம் ஆகியவற்றை பொறுத்து விமான கட்டணங்கள் வேறுபடும். ஆனால்ம் தேதி(இன்று) நள்ளிரவுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ ஆகிய நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
