திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் 3 ஆஸ்தானங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி), ஸ்ரீராமநவமி, பட்டாபிஷேகம் என 3 ஆஸ்தானங்கள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி முன்பு நடைபெற உள்ளது. மார்ச் 19ம் தேதியன்று பராபவ நாம வருட யுகாதியை முன்னிட்டு மூலவருக்கும் உத்சவமூர்த்திகளுக்கும் புதிய வஸ்திரம் சமர்ப்பிக்கப்படும். இந்த சந்தர்ப்பத்தில், வேத பண்டிதர்கள் முன்னிலையில் புத்தாண்டுக்கான பஞ்சாங்கம் படித்து காண்பிக்கப்பட்டு யுகாதி ஆஸ்தானம் நடைபெறும். தொடர்ந்து மார்ச் 27ம் தேதி ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை கருடாழ்வார் முன்னிலையில் ராமநவமி ஆஸ்தானம் நடைபெறும். முன்னதாக மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஹனுமந்த வாகனத்தில் சுவாமி திருமாட வீதிஉலா நடைபெறும். மறுநாள் ஏழுமலையான் கோயிலில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை ராமரின் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

Related Stories: