சமையல் எரிவாயு தட்டுப்பாடு சபரிமலையில் அன்னதானம் வழங்குவதில் சிக்கல்

திருவனந்தபுரம்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரான் போரால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஓட்டல்கள், பேக்கரிகள், விடுதிகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

வரும் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். தினமும் சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள். இந்நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுதால் இவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோயிலில் பிரசாதம் தயாரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மற்றும் சமையல் எரிவாயு ஏஜென்சியிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தி உள்ளது.

Related Stories: