திருமலை: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமானவர் சீனிவாசரெட்டி. இவர் ஒய்எஸ்ஆர். காங். கட்சியில் இருந்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகனுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் கொள்கைகள் மீது தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் வெளியேறுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஓங்கோலில் நேற்றிரவு அவர் அளித்த பேட்டி: கட்சியின் சில கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் சில மாதங்களாக ஒதுங்கியிருந்தேன். ஜெகன்மோகன் தலைமையில் கட்சி மேற்கொள்ளும் எவ்வித புதிய செயலும் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன். ஓரிரு நாளில் ஜனசேனா கட்சித்தலைவரும், ஆந்திர மாநில துணைமுதல்வருமான பவன் கல்யாணை சந்தித்து அவரது கட்சியில் இணைய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பவன் கட்சியில் ஐக்கியம் appeared first on Dinakaran.