ஒன்றிய அரசு தகவல்; ஏஐ வீடியோக்களுக்கு முத்திரை கட்டாயம்: விதிகள் விரைவில் வெளியீடு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ உள்ளிட்ட கன்டென்ட்களில் கட்டாயம் முத்திரையிடுவது குறித்த ஆலோசனை நிறைவடைந்திருப்பதாகவும் விரைவில் விதிகள் வெளியிடப்படும் என்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் கிருஷ்ணன் கூறி உள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோ உள்ளிட்ட கன்டென்ட்கள் நிஜமானவை போலவே இருப்பதால் சில சமயங்களில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுகின்றன.

ஏஐ மூலம் பல ஆபாச வீடியோக்களும் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்படும் கன்டென்ட்கள் மீது ‘இது ஏஐயால் உருவாக்கப்பட்டது’ என முத்திரையிடுவதை கட்டாயமாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் கிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஏஐ கன்டென்ட்கள் மீது கட்டாய முத்திரை குத்துவது குறித்த தொழில்துறையினருடனான ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளன.

இதை தொழில்துறையினர் புரிந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொண்டனர். அதனால் இதற்கு எதிராக எந்தவொரு கடுமையான எதிர்ப்பும் எழவில்லை. தொழில்துறையினரிடம் பெற்ற கருத்துக்கள் அடிப்படையில் அரசின் மற்ற அமைச்சகங்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே மிக விரைவில் புதிய விதிகளை வெளியிடுவோம்’’ என்றார்.

Related Stories: