திருமங்கலத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக கண்ணை கட்டி 10 மணிநேரம் சுருள்வாள் சுற்றும் போட்டி

திருமங்கலம்: திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்ஸ் சார்பில், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் 13 வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் கண்ணை கட்டி சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது. திருமங்கலம் பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் தங்களது கண்களை கட்டிகொண்டு தொடர்ந்து 10 மணிநேரம் சுருள் வாள் சுற்றினர். திருமங்கலம் பிகேஎன் பள்ளியில் சோழன் புத்தகம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக துவங்கிய இந்த சாதனை போட்டியை இந்தியன் சிலம்ப பள்ளி ஆசிரியர் மாஸ்டர் மணி துவக்கி வைத்தார். லீ சாம்பியன் மாஸ்சியல் ஆர்ஸ்ட் நிறுவனர் பால்பாண்டியன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் நவாஷ்செரிப் (22), சுபாஷ் (20), விக்னேசன் (19) ஆகியோர் தங்களது கண்களை கட்டிகொண்டு சுருள் வாளை சுற்றினர். உலக சாதனை நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு துவங்கி மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது. …

The post திருமங்கலத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக கண்ணை கட்டி 10 மணிநேரம் சுருள்வாள் சுற்றும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: