அதனை மாற்றும் விதமாக செங்கல்பட்டு அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு வந்தால் பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம், என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களை அதனை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் டிசைன் டிசைனாக முடி வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.
இதையடுத்து, பள்ளி சார்பில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு முடி திருத்துவோர் நேற்று பள்ளிக்கு வந்தனர். 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் 56 பேருக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டது. அப்போது, ஒருசில மாணவர்கள் நான் இந்த பள்ளியில் படிக்க மாட்டேன், எனக்கு டீசி கொடுங்கள், நான் வேறு பள்ளிக்கு செல்கிறேன், என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்த ஆசிரியர்கள் முடி திருத்தம் செய்து அனுப்பினர். நேற்று ஒரேநாளில் 67 மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. அவர்களுக்கு இன்று முடிதிருத்தம் செய்யப்படும், என்று பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) மாயவன் தெரிவித்தார்.
* பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. இதையடுத்து, பள்ளி சார்பில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது
The post செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்த 67 மாணவர்களுக்கு முடி திருத்தம் appeared first on Dinakaran.