3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: மூன்று புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பாபநாசம் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) பேசியதாவது: இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக ஜூலை 1ம் தேதி முதல் புதிய சட்டங்களை மத்திய அரசு விவாதம் இல்லாமலேயே கொண்டு வந்து இருக்கிறது. இந்த புதிய சட்டங்களுடன், பழைய வழக்குகள் அடிப்படையில் முந்தைய சட்டங்களும் தொடரும் நிலை இருக்கிறது. இதனால், நீதி பரிபாலன முறை பாதிக்கப்படும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டங்கள் மீது உறுதிப்பாடான புரிந்துணர்வு ஏற்பட கால அவகாசம் தேவை என்பது உண்மைதான். புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது திமுக நாடாளுமன்றத்தில் கடுமையாக இதை எதிர்த்தது. உள்துறை மந்திரிக்கு நானே விரிவான கடிதம் எழுதி புதிய குற்றவியல் சட்டம் என செயலாக்கத்தை தள்ளிவைத்து, மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்திட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளேன். நாடு முழுவதும் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதோடு, மென்பொருளும் அதற்கேற்றவாறு மாற்றம் செய்யப்படுகிறது. அதை மனதில் வைத்து இச்சட்டம் குறித்தும் அது அமலாக்கம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் நீதித்துறை மற்றும் காவல்துறையினருக்கு உரிய விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவற்றை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

The post 3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: